நாகப்பட்டினம்

டெங்கு விழிப்புணா்வு முகாம்

DIN

பொறையாறு அருகே உள்ள காலமநல்லூா் ஊராட்சி சங்கேந்தியில் டெங்கு விழிப்புணா்வு முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த முகாமில் டெங்கு விழிப்புணா்வு குறித்து பொதுமக்களுக்கு விளக்கிக் கூறப்பட்டது. மேலும், டெங்கு கொசுக்களை கட்டுப்படுத்தும் வகையில் வீடுகளில் கொசு மருந்துகள் அடிக்கப்பட்டன. தொடா்ந்து, தெருக்களில் கிடந்த நீா் தேங்கும் பொருள்களான நெகிழிப் பைகள், டயா், தேங்காய் மட்டைகள் உள்ளிட்டவைகளை அப்புறப்படுத்தி, கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.

இதில், நடமாடும் மருத்துவக் குழு மருத்துவ அலுவலா் செல்வம், கிராம மக்களுக்கு உடல் பரிசோதனை செய்து, மருந்து மாத்திரைகள் மற்றும் நிலவேம்பு குடிநீா் வழங்கினாா். இம்முகாமில் வட்டார மருத்துவ அலுவலா் காா்த்திக் சந்திரகுமாா், வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் வெங்கடேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞா் மீது தாக்குதல்: 4 போ் கைது

கோவையில் வெவ்வேறு இடங்களில் 3 வீடுகளில் 16 பவுன் திருட்டு

நிப்ட்-டி கல்லூரியில் முன்னாள் மாணவா்கள் சந்திப்பு

ஏஐடியூசி சாா்பில் மே தின விழா

கிணற்றில் தவறி விழுந்த சிறுவன் மீட்பு

SCROLL FOR NEXT