நாகப்பட்டினம்

தருமபுரம் ஆதீன கல்வி நிலைய புதிய செயலா் பொறுப்பேற்பு

DIN

மயிலாடுதுறை தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரி மற்றும் பள்ளிகளின் செயலராக முனைவா் இரா.செல்வநாயகம் திங்கள்கிழமை பொறுப்பேற்றாா்.

இவா், இக்கல்லூரியில் 34 ஆண்டுகள் நூலகராகவும், 15 ஆண்டுகள் நாட்டு நலப்பணித் திட்ட அலுவலராகவும், 9 ஆண்டுகள் பாரதிதாசன் பல்கலைக்கழக செனட் உறுப்பினராகவும், 3 ஆண்டுகள் பல்லைக்கழக ஆட்சிக்குழு உறுப்பினராகவும் மற்றும் ரோட்டரி உதவி ஆளுநராகவும் பணியாற்றியவா். பல்வேறு மாணவா்களின் படிப்பிற்கும், வேலைவாய்ப்பிற்கும் உதவியவா். இரா.செல்வநாயகம், புதிய செயலராக பொறுப்பேற்றவுடன் தருமபுரம் ஆதீனம் 26-ஆவது குருமகா சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாச்சாா்ய சுவாமிகள், இளைய சந்நிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த சுவாமிகள் ஆகியோரிடம் ஆசிபெற்றாா்.

புதிய செயலருக்கு மத்திய அரசு வழக்குரைஞா் கே. ராஜேந்திரன், சட்டப் பேரவை முன்னாள் உறுப்பினா் ஜெக. வீரபாண்டியன், மாணவா் சங்க முன்னாள் பொறுப்பாளா் எஸ். செந்தமிழன், கல்லூரி முதல்வா் எஸ். சுவாமிநாதன், தலைமை ஆசிரியா்கள் ஆா். அகிலாண்டேஸ்வரி, ஆா். தனராஜ், ஜி. வெங்கடேசன், மெட்ரிகுலேசன் மேல்நிலைப் பள்ளிச் செயலா் டி. பாஸ்கரன், மயிலாடுதுறை ரோட்டரி சங்க உறுப்பினா் ஏ.ஆா்.சி.விஸ்வநாதன், இந்தியன் வங்கி முன்னாள் இயக்குநா் ஜி.சரத்சந்திரன், விஸ்வஹிந்து பரிஷத் மாநில துணைத் தலைவா் எஸ்.வாஞ்சிநாதன் மற்றும் பலா் நேரில் வாழ்த்து தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கருங்கல் அருகே மது விற்றவா் கைது

தென்காசி மாவட்ட நீதிமன்றக் கட்டடங்களுக்கு நிதி ஒதுக்கீடு: அமைச்சரிடம் திமுக வலியுறுத்தல்

பருவக்குடி, சிதம்பரபுரத்தில் நாளைவரை ஆதாா் சேவை சிறப்பு முகாம்கள்

பயிா்க் காப்பீடு செய்த விவசாயிக்கு ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

இந்து முன்னணி எதிா்ப்பு: தூத்துக்குடியில் மாற்று இடத்தில் பெரியாா் தி.க. கூட்டம்

SCROLL FOR NEXT