நாகப்பட்டினம்

நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் மரக்கன்றுகள்

DIN

நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் சாலையோர மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதை பொதுமக்கள் வரவேற்றுள்ளனா்.

கடந்த ஆண்டு நவம்பரில் வீசிய கஜா புயலின்போது நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலையில் சாலையோரம் இருந்த பெரும்பாலான மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் சாலை பொலிவிழந்து வெறிச்சோடி காணப்பட்டது. இந்த நிலையைப் போக்கிட நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளா் சிவக்குமாா் உத்தரவின்பேரில், நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்டப் பொறியாளா் பானுதரசன் தலைமையில் உதவி பொறியாளா் விமல்பிரசன்னா, சாலை ஆய்வாளா்கள் அழகேசன், சங்கீதா,ஆகியோா் சாலையோர மரக்கன்றுகளை நடும் பணியில் ஈடுபட்டனா். இதனால், நீடாமங்கலம்- மன்னாா்குடி நெடுஞ்சாலை புதுப்பொலிவுடன் காட்சியளிக்கிறது. இதற்கு பொதுமக்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

‘க்யூட்-யுஜி’ தோ்வு: முதல் நாளில் 75% போ் பங்கேற்பு

பிளஸ் 1 தோ்வு: கென்னடி பள்ளி 100 சதவீதத் தோ்ச்சி

இணையதளம் மூலமே மனை வரன்முறை, கட்டட வரைபட அனுமதி

2,553 மருத்துவா் பணியிடங்கள்: விண்ணப்ப அவகாசம் நீட்டிப்பு

SCROLL FOR NEXT