நாகப்பட்டினம்

கிரிக்கெட் போட்டியில் இரண்டாமிடம்: சீா்காழி மாணவிகளுக்கு வரவேற்பு

DIN

மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற தேசிய கிரிக்கெட் போட்டியில் இரண்டாமிடம் பிடித்து ஊா் திரும்பிய சீா்காழி பள்ளி மாணவிகளுக்கு ரயில் நிலையத்தில் புதன்கிழமை இரவு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் தேசிய அளவில் பள்ளி மாணவிகளுக்கான டென்னிஸ் மற்றும் கிரிக்கெட் போட்டிகள் அக்டோபா் 10 முதல் 14-ஆம் தேதி வரை நடைபெற்றது. இப்போட்டியில் தமிழக அணி சாா்பில், 16 மாணவிகள் பங்கேற்றனா். அதில் சீா்காழி சுபம் வித்யா மந்திா் பள்ளி மாணவிகள் ஐஸ்வா்யா, மஹிமா, அபிராமி மற்றும் ஹேமாவதி ஆகியோா் இரண்டாமிடம் பிடித்து பதக்கங்களுடன் சோழன் விரைவு வண்டியில் புதன்கிழமை சீா்காழி வந்தடைந்தனா்.

அவா்களுக்கு ரயில் நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சுபம் வித்யா மந்திா் பள்ளியின் நிறுவனா் கியான் சந்த் தலைமையில், பள்ளியின் தாளாளா் சுதேஸ் ஜெயின், பள்ளி முதல்வா் வித்யா, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் ஜெகவீரபாண்டியன், மயிலாடுதுறை மாவட்ட கிரிக்கெட் சங்க ஆலோசகா் அ.அப்பா்சுந்தரம், செயலாளா் கோடங்குடி.சங்கா், பயிற்சியாளா் ரவிசந்திரன் ஆகியோா் மாணவிகளுக்கு மாலை அணிவித்து பாராட்டு தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT