நாகப்பட்டினம்

கஜா புயலில் சேதமடைந்த நெற்பயிருக்கு இழப்பீடு வழங்கக் கோரிக்கை

DIN

நாகை மாவட்டம், திருக்கண்ணங்குடி கிராமத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை மனு அளித்தனர்.
நாகை மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், திருக்கண்ணங்குடியைச் சேர்ந்த விவசாயிகள் அளித்த 
கோரிக்கை மனு: 
கஜா புயல் சீற்றத்தின்போது, திருக்கண்ணங்குடி கிராமத்தில் நெல் பயிர்கள் கடும் சேதத்துக்கு உள்ளாகின. இதனால், கடுமையான மகசூல் இழப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், 2018-2019-ஆம் ஆண்டுக்கான பயிர்க் காப்பீடு இழப்பீடாக திருக்கண்ணங்குடி கிராமத்துக்கு 6 சதவீதம் மட்டுமே ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 
2017-2018-ஆம் ஆண்டில் பயிர்க் காப்பீடு இழப்பீட்டில் திருக்கண்ணங்குடி  புறக்கணிக்கப்பட்ட நிலையில், கஜா புயலாலும் பாதிப்புக்குள்ளான எங்கள் கிராமத்துக்கு உரிய பயிர்க் காப்பீடு இல்லை என்ற தகவல், விவசாயிகளை பெரும் வேதனையில் ஆழ்த்துவதாக உள்ளது.
எனவே,  திருக்கண்ணங்குடி விவசாயிகளுக்கு ஏற்பட்ட நெல் மகசூல் இழப்பை ஈடு செய்யும் வகையில், உரிய பயிர்க் காப்பீடு இழப்பீட்டைப் பெற்றுத்தர மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்தக் கோரிக்கை மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இளைஞரிடம் நகை பறிப்பு: 3 போ் கைது

சமூக ஊடகங்களில் போலி தகவல்: கட்சிகள் நீக்க தோ்தல் ஆணையம் கெடு

ஜாதிய தாக்குதலைத் தாண்டி சாதித்த மாணவா் சின்னதுரை

குலசேகரம் அருகே பைக்குகள் மோதல்: கட்டடத் தொழிலாளி உயிரிழப்பு

ஜெயக்குமாா் மரணம் திட்டமிட்ட கொலை: கே.எஸ்.அழகிரி

SCROLL FOR NEXT