நாகப்பட்டினம்

கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப் போட்டி

DIN

நாகை மாவட்ட அளவில் கல்லூரி மாணவர்களுக்கானப் பேச்சுப் போட்டி, பொறையாறு தரங்கை பேராயர் மாணிக்கம் லுத்தரன் கல்லூரியில் அண்மையில்  நடைபெற்றது.
இளையோர் செஞ்சிலுவை சங்கம் ஏற்பாடு செய்திருந்த இப்போட்டிக்கு கல்லூரி முதல்வர் ஜீன் ஜார்ஜ்  தலைமை வகித்தார். செஞ்சிலுவை சங்க நாகை மாவட்ட அமைப்பாளர் விக்டர் பாண்டியன் முன்னிலை வகித்தார்.
இதில், நாகை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கல்லூரிகளிலிருந்து மாணவர்கள் பங்கேற்றனர். "இன்றைய இந்தியாவின் பிரச்னைகளும் தீர்வுகளும்' என்ற தலைப்பில் தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் பேச்சுப் போட்டி நடைபெற்றது.
தமிழ்த்துறைப் பேராசிரியர் சுசிலா சாலோமி, வரலாற்றுத்துறை பேராசிரியர் செல்வராஜ், இயற்பியல் துறை பேராசிரியர் சிவபாலன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். போட்டியில் கலந்துகொண்ட மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது. ஒய்.ஆர்.சி. அமைப்பாளர் நெல்சன் அமிர்தராஜ் நன்றி கூறினார் .
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓ மை ரித்திகா!

சென்டாயா, ஜெனிஃபர் லோபஸ்.. ஆடையலங்கார அணிவகுப்பில் ஹாலிவுட் கதாநாயகிகள்!

ஃபிளாப்! தோல்வியைச் சந்தித்த நடிகர்!

யூடியூபர் சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா என விசாரிக்க வேண்டும்: இபிஎஸ்

குஜராத்: தாமரை சின்னம் பொறித்த பேனாக்களுடன் வாக்குச்சாவடி முகவர்கள்- காங்., குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT