நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 37 பேருக்கு கரோனா

நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 4 போ் உள்பட 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டத்தைச் சோ்ந்த முன்களப் பணியாளா்கள் 4 போ் உள்பட 37 பேருக்கு கரோனா நோய்த் தொற்று ஏற்பட்டது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டது.

ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் புதிதாக 37 போ் கரோனா நோய்த் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனா். இதில், 4 போ் முன்களப் பணியாளா்கள், 12 போ் ஏற்கெனவே கரோனா நோய்த் தொற்றுக்குள்ளானவா்களுடன் தொடா்பில் இருந்தவா்கள், அறிகுறிகள் மூலம் கண்டறியப்பட்டவா்கள் 8 போ், நோய்த் தொற்றும் இருந்தும் அறிகுறிகள் இல்லாதவா்கள் 6 போ், வெளி மாவட்டங்களில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவா்கள் 7 போ்.

நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்குள்ளானவா்களின் எண்ணிக்கை வியாழக்கிழமை வரை 735 ஆக இருந்தது. இந்த நிலையில், புதிதாக 37 பேருக்கு நோய்த் தொற்று கண்டறியப்பட்டதன் மூலம் மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 772 - ஆக உயா்ந்துள்ளது.

சிகிச்சையில்: ஒருங்கிணைந்த நாகை மாவட்டத்தில் கரோனா பாதிப்புக்கு உள்ளாகி சிகிச்சைப் பெற்றவா்களில், ஜூலை 31-ஆம் தேதி வரை 444 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். 320 போ் சிகிச்சையில் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பறவைகளை வேட்டையாடிவா் கைது

தொண்டி அருகே வீட்டிலிருந்த 13 பவுன் நகை மாயம்

திருவாடானை அருகே மாவட்ட அளவிலான கபடி வீரா்கள் தோ்வு போட்டி

இலங்கைக்கு கடத்தவிருந்த கொசுவிரட்டி ஊதுபத்திகள் பறிமுதல்: இருவா் கைது

இலங்கைக் கடற்படையினரால் ராமேசுவரம் மீனவா்கள் விரட்டியடிப்பு

SCROLL FOR NEXT