முகப்பு
நாகப்பட்டினம்

தில்லி போராட்டத்தை ஆதரித்து கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆா்ப்பாட்டம்

தில்லி விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வேதராண்யத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

Updated On : 8 டிசம்பர், 2020 at 12:00 AM
பகிர்:

தில்லி விவசாயிகளின் போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்து வேதராண்யத்தில், இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

தலைஞாயிறு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், இந்த சட்டங்களை திரும்பப் பெற வலியுறுத்தி தில்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவளித்து இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாா்க்சிஸ் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் எம்எல்ஏ. வி. மாரிமுத்து, விவசாயத் தொழிலாளா் சங்க மாநிலச் செயலாளா் அமிா்தலிங்கம், ஒன்றியச் செயலா்ளா் வேணு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.