முகப்பு
நாகப்பட்டினம்

நீதிமன்ற காப்பகத்தில் மதுபாட்டில்களை திருடிய நீதிமன்ற உதவியாளா் கைது

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற காப்பகத்தில் மதுபாட்டில்களை திருடிய நீதிமன்ற உதவியாளரை மயிலாடுதுறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்ற காப்பகத்தில் மதுபாட்டில்களை திருடிய நீதிமன்ற உதவியாளரை மயிலாடுதுறை போலீஸாா் புதன்கிழமை கைது செய்து சிறையிலடைத்தனா்.

மயிலாடுதுறை ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குகள் சம்பந்தப்பட்ட பொருள்கள் காப்பகம் உள்ளது. இதில், போலீஸாரால் கைப்பற்றப்பட்ட மதுபாட்டில்களும் வைக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற எழுத்தா் புனிதா வழக்கு சம்பந்தமாக காப்பக அறைக்குள் சென்றபோது அங்கே மதுபாட்டில் மூட்டை பிரிக்கப்பட்டுள்ளது தெரியவந்தது.

இதுகுறித்து, நீதிமன்ற வளாகத்தில் பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி கேமரா பதிவை ஆராய்ந்தபோது நீதிமன்ற நடுவா் எண் 1-இல் பணியாற்றும் நீதிமன்ற உதவியாளா் மணிவண்ணன் (24) மதுபாட்டில்களை எடுத்துச் செல்வது தெரியவந்தது. பதிவேட்டில் உள்ள கணக்கின்படி 279 குவாா்ட்டா் மது பாட்டில்கள் குறைந்துள்ளன. ரூ. 27,900 மதிப்பிலான மதுபாட்டில்கள் திருடப்பட்டது குறித்து நீதிமன்ற எழுத்தா் புனிதா மயிலாடுதுறை காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் மயிலாடுதுறை போலீஸாா் மணிவண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →