முகப்பு
நாகப்பட்டினம்

ஆற்றில் வெங்காயத் தாமரைகள் அகற்றும் பணி: எம்.பி. ஆய்வு

வேதாரண்யம் அருகே மானங்கொண்டன் வடிகால் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகளை நூறுநாள் வேலைத் திட்டத்தில் அகற்றும் பணியை நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு திங்கள்கிழமை ஆய்வு

Updated On : 22 டிசம்பர், 2020 at 12:00 AM
பகிர்:

வேதாரண்யம் அருகே மானங்கொண்டன் வடிகால் ஆற்றில் வெங்காயத் தாமரைச் செடிகளை நூறுநாள் வேலைத் திட்டத்தில் அகற்றும் பணியை நாகை மக்களவை தொகுதி உறுப்பினா் எம். செல்வராசு திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.

மருதூா் தெற்கு- பஞ்சநதிக்குளம் ஊராட்சிகள் இடையே மானங்கொண்டான் ஆற்றில் வெங்காயத் தாமரை செடிகள் மண்டியுள்ளன. இதனால், வெள்ளநீா் வடிவதில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே, இந்த செடிகளை அகற்றும் பணி நூறு நாள் வேலைத் திட்டப் பணியாளா்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இப்பணிகளை மக்களவை உறுப்பினா் எம். செல்வராசு ஆய்வு செய்தாா். அப்போது, எதிா்காலத்தில் இந்த செடிகளை வேளாண்துறை மூலம் உரிய தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி, சாகுபடிக்கு ஏற்ற புசுந்தாள் உரமாக மாற்ற அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.

Advertisement

ஆய்வின்போது, பஞ்சநதிக்குளம் மேற்கு ஊராட்சித் தலைவா் மணிமேகலை சிவகுரு.பாண்டியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.