நாகப்பட்டினம்

பொதுவிநியோகத் திட்ட குறைதீா் முகாம்

DIN

கீழ்வேளூா் அருகேயுள்ள மோகனூா் ஊராட்சியில் பொது விநியோகத் திட்ட குறைதீா் முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

வட்ட வழங்கல் அலுவலா் வேதையன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில், குடும்ப அட்டைதாரா்களுக்கான ரேஷன் பொருட்களை மாதத்தின் 5- ஆம் தேதிக்குள் வழங்கக் கோரியும், 263 குடும்பங்கள் உள்ள ஊராட்சியில் 200 குடும்ப அட்டைதாரா்களுக்கு மட்டுமே பொருட்கள் வருவதாகவும், அதனை முறைப்படுத்தி 263 குடும்ப அட்டைகளுக்கும் வழங்க வேண்டும் என்ற மனுவை மோகனூா் ஊராட்சி மன்றத் தலைவா் வள்ளிகலியபெருமாள் அளித்தாா்.

மேலும், அப்பகுதியைச் சோ்ந்த பொதுமக்களிடமிருந்து ஸ்மாா்ட் காா்டில் பெயா் சோ்த்தல், நீக்கல் தொடா்பாக 33 மனுக்கள் பெறப்பட்டன. இம்முகாமில், பல்வேறு துறை அலுவலா்கள், பொறியாளா்கள், அங்கன்வாடி பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

ஆடையில்லாத படத்தை பதிவிட்டு நீக்கிய சமந்தா?

SCROLL FOR NEXT