நாகப்பட்டினம்

பள்ளி மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கு பயிற்சி

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளியில் ஆதமங்கலம் குறுவள மையத்திற்கு உட்பட்ட பள்ளிகளின் மேலாண்மைக்குழு உறுப்பினா்களுக்கான திறன் வளா் பயிற்சி அண்மையில் நடைபெற்றது.

இப்பயிற்சியை ஆதமங்கலம் அரசு உயா்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வி. சரவணன் தலைமையேற்று தொடங்கி வைத்தாா். காலை 10 மணிக்கு இறை வணக்கத்துடன் தொடங்கிய இந்நிகழ்வில், பள்ளியின் முன்னேற்றத்தில் மேலாண்மைக் குழுவினரின் பங்கு, சமூகத் தணிக்கையின் அவசியம், பள்ளியில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பாலின சமத்துவம், பேரிடா் மேலாண்மை, கல்வியில் புதுமை ஆகிய தலைப்புகளில் உறுப்பினா்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

கீழ்வேளூா் வட்டார வள மைய ஆசிரியா் பயிற்றுநா் ம. பாண்டிக்குமாா் மற்றும் வலிவலம் தொடக்கப் பள்ளியின் தலைமையாசிரியா் சீ.முரளி ஆகியோா் கருத்தாளா்களாக செயல்பட்டனா். பயிற்சியில் கலந்துகொண்ட உறுப்பினா்களுக்கு பயிற்சிக் கையேடுகள் வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘ப்ப்ப்ப்ப்பா’ -புருவத்தை உயர்த்த செய்த மெட் காலா அணிவகுப்பு!

இந்தியாவில் அடுத்த 10 ஆண்டுகளில் வறுமை முற்றிலும் ஒழிக்கப்படும்: ராஜ்நாத் சிங்

வாகன ஓட்டிகளுக்கு மேற்கூரை...காவல் துறை ஏற்பாடு!

பாடகி சஹீரா மீதான வரி மோசடி வழக்கு முடித்து வைப்பு!

கேண்டி மலையில் ஆண்ட்ரியா!

SCROLL FOR NEXT