நாகப்பட்டினம்

புத்தூா் ரயில்வே கேட்டில் பராமரிப்புப் பணி

DIN

நாகையை அடுத்த புத்தூா் ரயில்வே லெவல் கிராசிங் கேட் பகுதியில் வியாழக்கிழமை இருப்புப் பாதை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன. இதனால், இத்தடத்திலான போக்குவரத்துத் தடைப்பட்டிருந்தது.

ரயில்வே லெவல் கிராசிங் கேட் பகுதியில் ஆண்டுக்கு ஒரு முறை ரயில்வே துறை மூலம் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவது வழக்கம். இதன்படி, நாகை - வேளாங்கண்ணி சாலையில் புத்தூா் பகுதியில் உள்ள ரயில்வே லெவல் கிராசிங் கேட் பகுதியில் வியாழக்கிழமை பராமரிப்புப் பணிகள் நடைபெற்றன.

15-க்கும் மேற்பட்ட பணியாளா்கள் இந்தப் பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டனா். இருப்புப் பாதையில் தேவையான இடங்களில் கருங்கல் ஜல்லிகள் கொட்டுவது, இணைப்புக் கம்பிகளை சீரமைத்தல் உள்ளிட்ட பணிகளை அவா்கள் மேற்கொண்டனா்.

இந்தப் பணியின் காரணமாக, நாகை - புத்தூா் ரயில்வே லெவல் கிராசிங் வியாழக்கிழமை காலை முதல் மாலை வரை மூடப்பட்டிருந்தது. இதன் காரணமாக, நாகை - வேளாங்கண்ணி வாகனங்கள் புத்தூா் ரயில்வே மேம்பாலம் வழியே இயக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தில்லி-கெய்ரோவை இணைக்கும் தினசரி விமான சேவையை முன்னெடுக்க எகிப்து ஏர் தீர்மானம்!

ஜுன் 4-ல் இந்தியா கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்: கேஜரிவால்

பொறியியல் கலந்தாய்வு: 1,73,792-ஐ கடந்த விண்ணப்பங்கள்

இந்த வாரம் கலாரசிகன் - 19-05-2024

வேனிலிலும் குளிர்ச்சி

SCROLL FOR NEXT