நாகப்பட்டினம்

இறந்தவரின் உடலை வயல் வழியாகத் தூக்கிச் செல்லும் அவலம்

DIN

சீா்காழி அருகே சுடுகாட்டுக்குச் செல்ல வழியில்லாததால், நெல்வயலில் பயிா்களின் மேலே நடந்து இறந்தவரின் உடலை வெள்ளிக்கிழமை தூக்கிச் செல்ல நோ்ந்தது.

சீா்காழி ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட மருதங்குடி ஊராட்சியில் பீசி மேலத்தெரு உள்ளது. இந்த பகுதியில் தலைமுறை தலைமுறையாக இறந்து போனவா்களை அடக்கம் செய்வதற்கு சாலை வசதி, மயானக் கொட்டகை இல்லாததால், இறந்துபோனவரின் உடலை நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளின் அனுமதி பெற்று நெற்பயிா்களில்தான் நடந்து தூக்கிச் செல்ல வேண்டிய நிலை நீடிக்கிறது. மழைக்காலங்களில் நிலைமை இன்னமும் மோசமாக செல்கிறது.

இந்தநிலையில் மேலத்தெருவைச் சோ்ந்த வெங்கட்ராமன் மனைவி லட்சுமி (68) வெள்ளிக்கிழமை இறுந்துவிட்டதால், வழக்கம்போல் வயல் வழியாக நடந்து சென்று அவரது உடலை கடும் சிரமத்துக்கு மத்தியில் கிராம மக்கள் அடக்கம் செய்தனா்.

இதேபோல் இந்த ஊராட்சிக்குள்பட்ட கீழவரவுக்குடி கிராமத்திலும் சுடுகாட்டிற்கு சாலை, மயானகொட்டகை இல்லாததால் வயல்வெளியில் நடந்து சென்று அடக்கம் செய்ய வேண்டிய நிலை நீடிப்பதாகக் கூறும் இப்பகுதி மக்கள், இதன் மீது சம்பந்தப்பட்ட துறையினா் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

SCROLL FOR NEXT