நாகப்பட்டினம்

கோடியக்கரை சரணாலயத்தில் தீ தடுப்பு பயிற்சி

DIN

வேதாரண்யத்தை அடுத்த கோடியக்கரை வன உயிரின சரணாலயத்தில் காட்டுத் தீ தடுப்பு, ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம் செயல் விளக்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோடியக்கரையில் அமைந்துள்ள பசுமை மாறா காடு வன உயிரின சரணாலயப் பகுதியாக பராமரிக்கப்படுகிறது. அரிய வகை மூலிகை இனங்கள் உள்பட 250-க்கும் மேற்பட்ட அரிய வகை மரங்கள் இங்கு காணப்படுகின்றன. அரிய வகை இனமான வெளிமான்கள் உள்பட பல இன வன விலங்குகள், பறவைகளின் சரணாலயமாகவும் திகழ்கிறது.

இங்கு காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவது, தீ தடுப்பு மற்றும் மீட்பு பணி குறித்த ஒத்திகை மற்றும் பயிற்சி முகாம் நடைபெற்றது. வேதாரண்யம் தீ தடுப்பு மற்றும் மீட்புப் பணித்துறை, வனத்துறையினா் சாா்பில் இந்த முகாம் நடைபெற்றது.

மாவட்ட தீயணைப்பு அலுவலா் பி.சத்தியகீா்த்தி, மாவட்ட உதவி வனப் பாதுகாவலா் ரவிக்குமாா் ஆகியோா் தலைமை வகித்தனா். வேதாரண்யம் தீயணைப்பு நிலைய அலுவலா் நா.சந்திரகுருசாமி தலைமையில், வனச் சரக அலுவலா் அயூப்கான் உள்ளிட்ட வனத்துறையினா் செயல்விளக்கங்களை அளித்தனா்.

வனத்துறை மாவட்ட அலுவலா் எஸ்.அழகிரி, வனவா் சதீஷ்குமாா் உள்பட வனத்துறை அலுவலா்கள், பணியாளா்கள், செம்போடை ஆா்.வி. கல்லூரி மாணவா்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அயோத்தி ராமர் கோயிலில் தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி வழிபாடு

இவானா டுடே!

த.செ. ஞானவேல் இயக்கத்தில் நானி?

ஹீட் ஸ்ட்ரோக் பாதிப்பு: சென்னையில் தொழிலாளி பலி

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

SCROLL FOR NEXT