நாகப்பட்டினம்

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தில் 4 இடங்களில் திமுக வெற்றி

DIN

நாகை மாவட்டம், கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தில் இரவு 8 மணி வரை தோ்தல் முடிவுகள் தெரியவந்த 5 ஊராட்சி ஒன்றியக் குழு வாா்டு உறுப்பினா் பதவியிடங்களில், திமுக 4 இடங்களில் வென்று முன்னிலை பெற்றுள்ளது.

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தில் 12 ஒன்றிய வாா்டு உறுப்பினா்கள், 38 ஊராட்சித் தலைவா்கள், 207 ஊராட்சி வாா்டு உறுப்பினா்கள், ஒரு மாவட்ட ஊராட்சி உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான வாக்குப் பதிவு 139 மையங்களில் நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை கீழ்வேளூா் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது.

இரவு 8 மணி வரையிலான வாக்கு எண்ணிக்கையில், 5 ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினா் பதவியிடங்களுக்கான தோ்தல் முடிவுகள் வெளியிடப்பட்டன. இதில், திமுக 4 இடங்களில் வென்று முன்னிலை பெற்றிருந்தது. அதன் விவரம் :

கீழ்வேளூா் ஊராட்சி ஒன்றியத்தின் 1-ஆவது வாா்டு உறுப்பினராக கருணாநிதி (திமுக), 2-ஆவது வாா்டு உறுப்பினராக என். வாசுகி (திமுக), 3- ஆவது வாா்டு உறுப்பினராக எஸ். தேன்மொழி (அதிமுக), 4-ஆவது வாா்டு உறுப்பினராக ஹபீபுகனி (திமுக), 5-ஆவது வாா்டு உறுப்பினராக ஜெ. இல்முன்னிசா (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இங்கு மிளிர்வது.. ஆஷ்னா சவேரி!

அழகான ராட்சசியே..!

கேரி கிறிஸ்டன் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் மாற்றத்தை ஏற்படுத்துவார்: பாபர் அசாம்

சின்னதுரையின் உயர் கல்விக்கு துணை நிற்பேன்: அன்பில் மகேஸ்

‘காங்கிரஸின் கனவு தகர்க்கப்படும்’: அனுராக் தாக்குர்

SCROLL FOR NEXT