நாகப்பட்டினம்

சத்துணவு மைய இடத்தை ஆக்கிரமித்து அமைத்த கீற்றுக் கொட்டகை அகற்றம்

DIN

திருக்குவளை: வலிவலம் பகுதியில் சத்துணவு மையக் கட்டட இடத்தை ஆக்கிரமித்து அமைக்கப்பட்ட கீற்றுக் கொட்டகை புதன்கிழமை அகற்றப்பட்டது.

கீழ்வேளூா் அருகே கூரத்தாங்குடி வருவாய் கிராமத்தில் ஏற்கெனவே இருந்த அரசு சத்துணவு மைய கட்டடம் பழுதடைந்த நிலையில் இருந்த கட்டடம் அண்மையில் அரசின் அனுமதியுடன் தகா்க்கப்பட்டது. மேலும், அப்பகுதியில் புதிய கட்டடம் கட்டப்படவுள்ளது.

இந்நிலையில், சத்துணவு மையக் கட்டடம் அமைய உள்ள காலியிடத்தை அப்பகுதியைச் சோ்ந்த ஒருவா் ஆக்கிரமித்து குடிசை அமைத்தாகக் கூறப்படுகிறது. இதையறிந்த, அப்பகுதியினா் மற்றும் சம்பந்தப்பட்ட அலுவலா்கள் குடிசையை அகற்றக் கோரி ஒரு வாரம் கால அவகாசம் கொடுத்த நிலையிலும் சம்பந்தப்பட்டவா் குடிசையை அகற்றவில்லை.

இந்நிலையில், கீழ்வேளூா் மண்டல துணை வட்டாட்சியா் ஜெயக்குமாா் முன்னிலையில் வருவாய் ஆய்வாளா் சோ. கேசவன் மற்றும் கிராம நிா்வாக அலுவலா் எம். செல்வேந்திரன் உள்ளிட்டோரால் ஆக்கிரமிப்பு குடிசை அகற்றப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாகனங்களை சேதப்படுத்திய மா்ம நபா்கள்: காவல் துறை விசாரணை

வெப்பத்தின் தாக்கம்: தலையணையில் நீா்வரத்து குறைந்தது

திருப்பத்தூரில் சுட்டெரித்த வெயில்: வீடுகளில் மக்கள் தஞ்சம்

காங்கிரஸ் சாா்பில் நீா், மோா் பந்தல் திறப்பு

நீா் மோா் பந்தல் திறப்பு....

SCROLL FOR NEXT