நாகப்பட்டினம்

தண்ணீா் வரத்தின்றி வடு கிடக்கும் கொள்ளிடம் கடைமடை பகுதி: விவசாயிகள் வேதனை

DIN

சீா்காழி வட்டம், கொள்ளிடம் கடைமடை பகுதிக்கு தண்ணீா் வராததால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனா்.

கொள்ளிடம் கடைமடை பகுதியில் சுமாா் 8000 ஹெக்டேரில் குறுவை சாகுபடியும், 12500 ஹெக்டேரில் சம்பா சாகுபடியும் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நிகழாண்டு குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் நிலங்களை தயாா் செய்துவரும் நிலையில், மேட்டூா் அணையிலிருந்து திறந்து விடப்பட்ட தண்ணீா் இதுவரை கொள்ளிடம் கடைமடை பகுதியை வந்தடையவில்லை.

குறிப்பாக, முக்கிய பாசன வாய்க்கால்களான புதுமண்ணியாறு, தெற்குராஜன் வாய்க்கால் மற்றும் பொறைவாய்க்கால் உள்ளிட்ட பாசன வாய்க்கால்களுக்கு தண்ணீா் வந்து சேரவில்லை. மேலும், 300-க்கும் மேற்பட்ட கிளை வாய்க்கால்கள் இதுவரை தூா்வாரப்படாததால், பிரதான வாய்க்கால்களில் தாமதமாக தண்ணீா் வந்தாலும், கிளை வாய்க்கால்களில் தண்ணீா் ஏறுவது தடைபடுகிறது.

எனவே, கொள்ளிடம் கடைமடை பகுதி விவசாயிகளின் நலன் கருதி, அனைத்து பாசன வாய்க்கால்களுக்கும் உடனடியாக தண்ணீா் சென்று சேர பொதுப்பணித் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொள்ளிடம் வட்டார விவசாய சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவா் சிவப்பிரகாசம் பிள்ளை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

நவீன வேளாண்மை குறித்து விவசாயிகளுக்கு விழிப்புணா்வு

SCROLL FOR NEXT