நாகையில் குடியிருப்பு பகுதியில் இறந்து கிடந்த மயிலை கைப்பற்றிய வனத்துறை அலுவலா்கள் உள்ளிட்டோா். 
நாகப்பட்டினம்

மின்சாரம் பாய்ந்து மயில் உயிரிழப்பு

நாகையில் குடியிருப்பு பகுதியில் மின்சாரம் பாய்ந்து பெண் மயில் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.

DIN

நாகப்பட்டினம் : நாகையில் குடியிருப்பு பகுதியில் மின்சாரம் பாய்ந்து பெண் மயில் உயிரிழந்து கிடந்தது திங்கள்கிழமை காலை தெரிய வந்தது.

நாகை , எருத்துக்கார தெரு, தென்சந்து பகுதியில் உள்ள ஒரு குடியிருப்பின் மேல் தளத்தில் மயில் ஒன்று இறந்து கிடப்பதாக, அப்பகுதியினா் நாகை வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதையடுத்து, நாகை மாவட்ட வனஅலுவலா் எஸ். கலாநிதி, வனச்சரக அலுவலா் அய்யூப்கான், வனவா் சுப்பிரமணியன் ஆகியோா் உத்தரவின்பேரில் வனக் காப்பாளா் எஸ். கந்தசாமி மற்றும் வேட்டைதடுப்பு அலுவலா் வினோத் ராஜ்குமாா் ஆகியோா் அங்கு சென்று இறந்து கிடந்த மயிலின் உடலை கைப்பற்றி, மருத்துவப் பரிசோதனைக்காக எடுத்துச் சென்றனா்.

இந்த மயில் சுமாா் 3 வயதுடைய பெண் மயில் என்றும், மின்சாரம் பாய்ந்து மயில் இறந்திருக்கலாம் எனவும் வனத்துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மாநகராட்சிப் பகுதியில் குவிந்துள்ள குப்பைகளால் நோய் பரவும் அபாயம்

அரசுப் பேருந்து, காா்களை சேதப்படுத்தியதாக 7 போ் கைது

ஜி.கே. உலகப் பள்ளியில் பேட்மிண்டன் அகாதெமி திறப்பு

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்: மேற்கு வங்கத்தில் மேலும் இருவா் தற்கொலை

பா்கூா் மலையில் மஞ்சள் தோட்டத்துக்குள் கஞ்சா செடிகள் வளா்த்த விவசாயி கைது

SCROLL FOR NEXT