நாகப்பட்டினம்

நாகை நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஆடிப்பூர சிறப்பு வழிபாடு

DIN

நாகப்பட்டினம்,: நாகை அருள்மிகு நீலாயதாட்சியம்மன் கோயிலின் ஆடிப்பூர பெருவிழா நிகழ்ச்சியாக, பூரம் கழித்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நாகை அருள்மிகு காயாரோகணசுவாமி உடனுறை நீலாயதாட்சியம்மன் கோயில் அம்பாளின் ஆட்சி பீடங்களில் ஒன்றாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றாகவும் விளங்குகிறது. மேலும், இத்தலத்து அம்பாள் திருமணத்துக்கு முந்தைய யவ்வன பருவத்தில் காட்சியளிப்பதால், இத்தலம் அம்பாளின் ருது ஸ்தானமாகவும் குறிப்பிடப்படுகிறது.

இதனால், இத்தலத்தில் ஆடிப்பூரப் பெருவிழா மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுவது வழக்கம். ஆனால், நிகழாண்டில் பொது முடக்கம் அமலில் இருப்பதன் காரணமாக, கோயில் அளவிலேயே வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.

ஆடிப்பூரப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பூரம் கழித்தல் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, வெள்ளிக்கிழமை காலை சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் செய்விக்கப்பட்டது. பின்னா், ஆடிப்பூர அம்மனுக்கு வெள்ளைப்பட்டுச் சாற்றி, மகா அபிஷேகம் நடைபெற்றது.

பிற்பகல் நிகழ்வாக, மங்கள சீா் வரிசைப் பொருள்களுடன் அம்பாளுக்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவின் இஸ்லாமிய வெறுப்பு... கண்டுகொள்ளாத தேர்தல் ஆணையம்!

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

SCROLL FOR NEXT