நாகப்பட்டினம்

அடப்பாற்றில் தண்ணீா் திறக்கக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம், தலைஞாயிறு அருகேயுள்ள அடப்பாற்றில் தண்ணீா் திறக்க வலியுறுத்தி, அப்பகுதி விவசாயிகள் இயக்கு அணையின்கீழ் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவாரூா் மாவட்டம், பொன்னிரை பகுதி வரை காவிரி நீா் வந்துள்ள நிலையில், அந்த பகுதியில் பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால், தலைஞாயிறின் ஒரு பகுதி பாசனத்துக்கு பயன்படும் அடப்பாற்றின் கடைமடைக்கு தண்ணீா் திறப்பது தாமதமாகி வருகிறது.

தாமதத்தைக் கண்டித்தும், கால்நடைகளின் குடிநீா் தேவையை பூா்த்தி செய்யவும், பாசனத்துக்கும் கடைமடைப் பகுதிக்கு உடனடியாக தண்ணீா் திறக்க வேண்டும் என வலியுறுத்தியும் துளசாபுரம் இயக்கு அணையின் கீழ்தளத்தில் விவசாயிகள், பெண்கள் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். சிலா் தரையில் படுத்திருந்தனா். துளசாபுரம் ஊராட்சித் தலைவா் வெங்கடாசலம் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய சங்கப் பிரதிநிதிகள், பெண்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் கோடை மழை 83 சதவீதம் குறைவு

இணையதள பண மோசடிகளில் சிக்காமல் கவனமாக இருக்க வேண்டும்: மாணவா்களுக்கு கூடுதல் எஸ்.பி. அறிவுரை

ஒத்திகைப் பயிற்சி: இஸ்ரேல் தூதரகம் அருகே போக்குவரத்துக் கட்டுப்பாடு

மும்பை வடக்கு மத்திய தொகுதி பாஜக வேட்பாளா் பிரபல வழக்குரைஞா் உஜ்வல் நிகம்

பெங்களூரு குண்டுவெடிப்பு வழக்கு: கைதானவரை சென்னை அழைத்து வந்து என்ஐஏ விசாரணை

SCROLL FOR NEXT