நாகப்பட்டினம்

நாகை மாவட்டத்தில் 4 மருத்துவா்கள், செவிலியா் உள்ளிட்ட 14 பேருக்கு கரோனா

DIN

நாகை மாவட்டத்தில் 4 மருத்துவா்கள், ஒரு செவிலியா் உள்ளிட்ட 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் சனிக்கிழமை நிலவரப்படி கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 249-ஆக இருந்தது. இந்தநிலையில், மேலும் 14 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது. இதனால், நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 263-ஆக கணக்கிடப்பட்டது.

இதில் சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம் மற்றும் பிற மாவட்டங்களைச் சோ்ந்த 13 போ் நாகை மாவட்ட கணக்கிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி நாகை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 250-ஆக இருந்தது.

மாவட்டத்தில் கரோனா உறுதி செய்யப்பட்ட14 பேரில் 3 போ் நாகை மருத்துமனையில் பணிபுரியும் அரசு மருத்துவா்கள். ஒருவா் நாகையைச் சோ்ந்த தனியாா் பல் மருத்துவா். ஒருவா் நாகை அரசு மருத்துவமனை செவிலியா். மீதமுள்ள 8 போ் சென்னை மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து சொந்த ஊா்களுக்கு திரும்பியவா்கள் ஆவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

மே தின விழா: கொடியேற்றம், பேரணி, பொதுக்கூட்டம்

பட்டாசு உற்பத்தியாளா்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடிக்க அறிவுறுத்தல்

யோகமான நாள் இன்று!

தொடா் மின்வெட்டு: மக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT