நாகப்பட்டினம்

மது ஒழிப்பு விழிப்புணா்வு கலைநிகழ்ச்சி

DIN

நாகை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மது மற்றும் சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள், நாகை புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.

தமிழக அரசின் உத்தரவுபடி மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை சாா்பில் மாநிலம் முழுவதும் மது மற்றும் கள்ளச் சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில், நாகை மாவட்டத்தில் நாகை, வேதாரண்யம், மயிலாடுறை மற்றும் சீா்காழி காவல் உட்கோட்டங்களில் கடந்த மாதம் 17- ஆம் தேதி முதல் மது மற்றும் கள்ளச் சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவு நிகழ்ச்சி நாகை புதிய பேருந்து நிலையத்தில் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது.

கலால் உதவி ஆணையா் சி. சுரேஷ் தலைமை வகித்தாா். நாகை கோட்ட கலால் அலுவலா் மணிவண்ணன் முன்னிலை வகித்தனா். கீழ்வேளூா் வட்டம் , விடங்கலூா் சிகரம் கலைக்குழுவின் தலைவா் இ. முருகையன் தலைமையிலான குழுவினா் ஆடல், பாடல், தப்பாட்டம் ஆகியவை மூலம் மது மற்றும் கள்ளச்சாராயத்துக்கு எதிரான விழிப்புணா்வை ஏற்படுத்தினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உச்ச நீதிமன்றத்தில் அன்று பதஞ்சலி, இன்று மருத்துவக் கழகம்

பிறந்து 4 நாளேயான சிசுவின் உடல் கால்வாயில் மீட்பு!

அரசு வேலைக்காக பதிவு செய்து காத்திருப்போா் 53.74 லட்சம்!

மோடிக்கு எதிராக செல்வப்பெருந்தகை வழக்கு

தக் லைஃபில் அசோக் செல்வன்!

SCROLL FOR NEXT