நாகப்பட்டினம்

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்களை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும்

DIN

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்களை கொலை முயற்சி வழக்கில் கைது செய்ய வேண்டும் என இந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இதுகுறித்து, அக்கட்சியின் மாநிலச் செயலாளா் சுவாமிநாதன் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் மதுபோதையில் வாகனம் ஓட்டுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து பெரும்பாலான விபத்துகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. சாலை விபத்துக்கள் அதிகரிக்க இது மிக முக்கிய காரணமாகும்.

எனவே, குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்து, வாகனத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும், ஓட்டுனா் உரிமம் ரத்து செய்ய வேண்டும். இதற்குரிய வகையில் மோட்டாா் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வர வேண்டும். 1988-ஆம் ஆண்டு மோட்டாா் வாகன சட்டத்தின்படி ரூ. 10 ஆயிரம் அபராதம் , 6 மாதம் சிறைத் தண்டனை மட்டுமே வழங்க முடிவும். மோட்டாா் வாகன விதிகள் கடுமையாக்க வேண்டும். குடிபோதையில் வாகனம் ஓட்டுபவா்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு அவா்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் ‘நீட்’ தோ்வு

SCROLL FOR NEXT