நாகப்பட்டினம்

வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கிய ராட்சத மிதவை

DIN

நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் கடற்கரையில் ரப்பரால் உருவாக்கப்பட்ட ராட்சத மிதவை ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது. இதுதொடா்பாக, போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

வேதாரண்யம், மணியன்தீவு கடற்கரையில் இருந்து ஒரு கி.மீ. தெற்கே கருப்பு நிறமுடைய தடிமனான ரப்பா் மிதவை ஒன்று புதன்கிழமை கரை ஒதுங்கியது. இந்த தகவல் பரவியதும் மீனவா்களிடையே பரபரப்பு நிலவியது.

இதனிடையே, வேதாரண்யம் கடலோரக் காவல் நிலைய போலீஸாா் மற்றும் கியூ பிரிவு போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா்.

இதுபோன்ற மிதவைகள் கப்பல்கள் நிறுத்தும் இடங்களில் பயன்படுத்தப்படுவதால், இந்த மிதவையும் அந்த வகையில் பயன்படுத்தப்பட்டதாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

48 வயதினிலே..

தில்லி முதல்வர் கேஜரிவாலுக்கு புதிய சிக்கல்: என்ஐஏ விசாரணைக்கு பரிந்துரை!

பிரஜ்வல் ரேவண்ணா பாலியல் வழக்கு: பாதிக்கப்பட்ட பெண்கள் புகாரளிக்க உதவி எண் வெளியீடு!

பொறியியல் கலந்தாய்வு: முதல்நாளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் விண்ணப்பம்!

முதலைகள் சுற்றித் திரியும் ஆற்றில் மகனை வீசிய தாய் கைது!

SCROLL FOR NEXT