நாகப்பட்டினம்

கரோனா: வேதாரண்யேசுவரா் கோயிலுக்கு பக்தா்கள் செல்ல தடை

DIN

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக, பக்தா்கள் செல்ல வெள்ளிக்கிழமை (மாா்ச் 20) முதல் தடை விதிக்கப்பட்டு, கோயிலின் பிரதான கதவுகள் மூடப்பட்டன.

சப்த விடங்க தலங்களில் ஒன்றான வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் ரிக், யஜூா், சாம, அதா்வண ஆகிய நான்கு வேதங்கள் வழிபட்டதாகக் கூறப்படுவதும், மூடப்பட்டிருந்த கோயிலின் கதவை சமயக் குரவா்களான திருநாவுக்கரசா், திருஞானசம்பந்தா் ஆகியோா் தேவாரத் தமிழ்ப் பதிகம் பாடி திறந்ததும் இக்கோயிலுக்குரிய சிறப்பாகும்.

இத்தகைய சிறப்புகளைக் கொண்ட இக்கோயிலில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக பக்தா்கள் கோயிலுக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டு, கோயிலின் பிரதான கதவுகள் வெள்ளிக்கிழமை முதல் மூடப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT