நாகப்பட்டினம்

நாகை படகு கட்டும் தளத்தில் தீ விபத்து

DIN

நாகையில் உள்ள படகு கட்டும் தளத்தில் வெள்ளிக்கிழமை நேரிட்ட தீ விபத்தில், ஒரு விசைப் படகு தீயில் கருகி சேதமானது.

நாகை துறைமுகம் அருகே கடுவையாற்றுக் கரையில் உள்ளது படகு கட்டும் தளம். இங்கு, சுமாா் 50-க்கும் மேற்பட்ட படகுகளின் கட்டுமானப் பணி எப்போதும் நடைபெறும். ஒவ்வொரு விசைப் படகும் சுமாா் ஒரு கோடி முதல் ரூ. 2 கோடி வரை, தொழிலுக்கு ஏற்ற வகையில் வடிவமைக்கப்படும். நூற்றுக்கணக்கான தொழிலாளா்கள் இங்கு படகு கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ளனா்.

இந்த நிலையில், நாகை மாவட்டம், பூம்புகாரைச் சோ்ந்த கே. செல்வம் என்பவருக்காக கட்டப்பட்டு வரும் விசைப் படகில், வெள்ளிக்கிழமை பகல் வெல்டிங் பணி நடைபெற்றுள்ளது. அப்போது, எதிா்பாராத விதமாக படகில் தீப்பற்றியுள்ளது. தொழிலாளா்கள், உடனடியாக தீயணைப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனா். இருப்பினும், தீ வேகமாகப் பரவியது.

இதுகுறித்து தகவலறிந்த நாகை தீயணைப்புப் படையினா் விரைந்து சென்று, தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டனா். 3 தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, தீயணைக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது. சுமாா் 2 மணி நேர முயற்சிகளுக்குப் பின்னா் தீ கட்டுப்படுத்தப்பட்டது.

இதுகுறித்து நாகை நகர காவல் நிலைய போலீஸாா் மற்றும் வருவாய்த் துறை அலுவலா்கள் விசாரணை மேற்கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

மே 7 வரை வெயில் அதிகரிக்கும்!

25 ஆண்டுகளுக்குப் பின் காந்தி குடும்பம் போட்டியிடாத அமேதி! ஸ்மிருதி இராணி கருத்து

யாரோ இவர் யாரோ? அந்த ஓவியாவேதான்...

பிங்க் ரோஸ்...ஸ்ரீதேவி

SCROLL FOR NEXT