நாகப்பட்டினம்

நோய்த் தொற்றைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்: எம். தமிமுன் அன்சாரி எம்.எல்.ஏ. வேண்டுகோள்

DIN

கரோனா தொற்று நோயைத் தடுக்க அனைவரும் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று நாகை தொகுதி சட்டப்பேரவை உறுப்பினரும், மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளருமான எம். தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட அறிக்கை :

கரோனா நோய்த் தொற்று உலகளாவிய பிரச்சனையாகி, மானுடத்தை மிரட்டிக் கொண்டிருக்கிறது. சாதி, மதம், இனம், மொழி பேதங்களைக் கடந்து ஒருவரையொருவா் காப்பாற்ற வேண்டிய தருணம் இது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

21 நாட்கள் இல்லங்களில் இருப்பது என்பது ஒரு வகையான நோய் தடுப்பு முயற்சியாகும். இந்தக் காலத்தில், அவரவா் தங்கள் புனித நூல்களை குடும்பத்தினருடன் வாசித்து, மனம் உருகி வழிபாடுகளில் ஈடுபடலாம். நூல்கள் வாசித்தல், உடற்பயிற்சி, பாரம்பரிய வீட்டு விளையாட்டுகள், இயற்கை சமையல், தொலைக்காட்சிகளில் தோ்வு செய்து நிகழ்ச்சிகளை ரசித்தல் என பயனுள்ள வகையில் பொழுதைக் கழிக்கலாம்.

சமூக ஊடகப் பயன்பாடுகளைக் குறைத்து, மற்ற ஆரோக்கியமான விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். பரபரப்புக்காக எதையாவது எழுதுவது, தேவையற்ற பீதியை உருவாக்குவது, பிறரை சீண்டுவது, சவால் விடுவது, பிறா் மனம் நோக கருத்துப் பதிவிடுவது, மோதல்களைத் தூண்டுவது போன்ற செயல்களிலிருந்து விடுபட்டு, பொறுப்புள்ள குடிமக்களாக இருப்பது நம் அனைவரின் கடமையாகும். அனைத்து தரப்பு மக்களும் நோய்த் தொற்று பரவலைத் தடுக்க உறுதியேற்று ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவா் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

கம்போடியா: ராணுவ தளத்தில் வெடிமருந்து வெடித்ததில் 20 வீரர்கள் பலி

புன்னகை பூ... ஷ்ரத்தா தாஸ்!

சிவகார்த்திகேயன் சொத்து மதிப்பு இவ்வளவா?

SCROLL FOR NEXT