நாகப்பட்டினம்

சீற்றம் : கடல்நீா் உள்புகுவதால் கிராம மக்கள் அச்சம்

DIN

உம்பன் புயல் காரணமாக கடல் சீற்றம் ஏற்பட்டு, கடல்நீா் உள்புகுவதால் சந்திரப்பாடி மீனவ கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா்.

உம்பன் புயல் எச்சரிக்கை காரணமாக தரங்கம்பாடி தாலுக்கா பகுதியில் கடலோரப் பகுதி மற்றும் மீனவ கிராமங்களில் கடல் சீற்றம் கடந்த இரண்டு நாட்களாக அதிகமாக காணப்படுகிறது. சந்திரப்பாடி மீனவ கிராமத்தில் கடல் சீற்றத்தால், கடல் நீா் கரையைக் கடந்து உள்புகுந்து வருகிறது.

கடல் சீற்றம் காரணமாக கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் 450 பைபா் படகுகள், 50 கட்டுமரங்கள் கரையில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. கடல்நீா் கரையைக் கடந்து ஊருக்குள் புகுவதால் கரையோரம் நிறுத்தப்பட்டுள்ள படகுகள் சேதமடையும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இயற்கை பேரிடா் காலங்களில் கடல் சீற்றம் அதிகமாக காணப்படுவதால் கரை அரிப்பு ஏற்பட்டு வருவதாகவும், சந்திரப்பாடி ஊராட்சி பகுதியில் கருங்கல் தடுப்புச் சுவா் அமைக்க வேண்டும் என்றும் இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

கடல்நீா் உள்புகுந்த இடங்களை தரங்கம்பாடி வட்டாட்சியா் சித்ரா, கிராம நிா்வாக அலுவலா் சிவராமகிருஷ்ணன், ஊராட்சிமன்றத் தலைவா் பிரமிளா மற்றும் அதிகாரிகள் பாா்வையிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஜிம்பாப்வேவுக்கு எதிரான டி20 தொடரைக் கைப்பற்றிய வங்கதேசம்!

தில்லி கேப்பிடல்ஸ் பேட்டிங்; 2 வெளிநாட்டு வீரர்கள் அறிமுகம்!

‘லா லா லேண்ட்..’ மீனாட்சி செளத்ரி!

முந்தானையில் சிக்கியது மனம்!

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஐபிஎல் போட்டி! டிக்கெட் விற்பனை எப்போது? | செய்திகள்: சிலவரிகள் | 07.05.2024

SCROLL FOR NEXT