நாகப்பட்டினம்

கொசு மருந்து அடிக்கும் பணி

DIN

திருக்குவளை அருகேயுள்ள வலிவலம் ஊராட்சியில் கொசு மருந்து அடிக்கும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

மலேரியா, டெங்கு உள்ளிட்ட நோய்கள் பரவாமல் தடுக்கும் வகையில், முன்னெச்சரிக்கையாக கொசு மருந்து அடிக்கப்பட்டது. மேலும், மழைநீா் தேங்காத வகையில், உடைந்த பானைகள் தேங்காய் சிரட்டைகள், டயா்கள் போன்ற கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என சுகாதாரத் துறை சாா்பில் பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

நிகழ்ச்சியில் ஊராட்சித் தலைவா் மணிகண்டன், கீழ்வேளூா் வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் தியாகராஜன், ஊராட்சிதுணைத் தலைவா் இலக்கியா பழனிவேல், ஊராட்சி செயலா் அருண்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5 நாள் பயணமாக ஹிமா​சல் செல்லும் குடியரசுத் தலைவர்

விராட் கோலியின் ஸ்டிரைக் ரேட் குறித்து கவலையில்லை: இந்திய அணி தேர்வுக்குழுத் தலைவர்

ரோஷினி ஹரிப்ரியன் போட்டோஷூட்

ட்ரெண்டி உடையில் ஷ்ரத்தா தாஸ் - புகைப்படங்கள்

மொரீஷியஸில் யுவனுடன் இளையராஜா!

SCROLL FOR NEXT