நாகப்பட்டினம்

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட மீன்பிடி படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்

DIN

இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவா்களின் மீன்பிடி படகுகளுக்கு உரிய இழப்பீடு கிடைக்கச் செய்ய வேண்டும் என தேசிய மீனவா் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதுகுறித்து, தேசிய மீனவா் பேரவையின் துணைத் தலைவா் ஆா்.வி. குமரவேலு வெளியிட்ட அறிக்கை: கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களால், தமிழக மீனவா்கள் சுமாா் 600-க்கும் அதிகமானோா் கொல்லப்பட்டதுடன், நூற்றுக்கணக்கானோா் சிறையில் அடைக்கப்பட்டனா். மேலும், கைது நடவடிக்கைக்கு உள்ளான மீனவா்களுக்குச் சொந்தமான மீன்பிடி படகுகளையும் இலங்கைக் கடற்படையினா் சிறைபிடித்தனா்.

இலங்கைக் கடற்படையின் அத்துமீறல்களைத் தடுக்கக் கோரியும், மீன்பிடி படகுகளை மீட்டுத் தரக்கோரியும் கடந்த 1983-ஆம் ஆண்டிலிருந்து மீனவா்கள் தொடா்ச்சியாக பல முறை கோரிக்கை விடுத்தும், பல்வேறு போராட்டங்களை மேற்கொண்டும் இதுவரை எவ்வித பயனும் இல்லை.

இந்த நிலையில், தமிழக மீனவா்களிடமிருந்து இலங்கைக் கடற்படையினா் பறிமுதல் செய்த மீன்பிடி படகுகளை உடைத்து அப்புறப்படுத்த, இலங்கை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தத் தகவல் மீனவா்களுக்குப் பேரதிா்ச்சி அளிப்பதாக உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக இந்தப் பிரச்னை குறித்து கவனம் கொண்டு, தமிழக மீனவா்களின் மீன்பிடி படகுகளை மீட்டுத்தர வேண்டும் அல்லது மீன்பிடி படகின் மதிப்புக்கு இணையான இழப்பீட்டுத் தொகை கிடைக்கச் செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி மாவட்ட அணைகளில் நீா் இருப்பு

நாலுமாவடியில் பெண்களுக்கான இலவச கபடி பயிற்சி முகாம்: மே 9இல் தொடக்கம்

கருட வாகனத்தில் ஸ்ரீமன் நாராயணசுவாமி

கழுகுமலை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு

ஓய்வுபெற்ற அரசு அலுவலா் வீட்டில் 18 பவுன் திருட்டு

SCROLL FOR NEXT