நாகப்பட்டினம்

பழையாா் கடற்கரையில் அழுகிய நிலையில் கரை ஒதுங்கிய திமிங்கலம்

DIN

நாகை மாவட்டம், பழையாா் கடற்கரையில் அழுகிய நிலையில் திமிங்கலம் செவ்வாய்க்கிழமை கரை ஒதுங்கியது.

பழையாா் துறைமுகத்தில் இருந்து 1 கி. மீ. தொலைவில் உள்ள மடவாமேடு என்ற இடத்தில் இந்த திமிங்கலம் கரை ஒதுக்கியது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினா், கடலோரக் காவல் படையினா் நிகழ்விடத்துக்குச் சென்று, அழுகிய நிலையில் கிடந்த திமிங்கலத்தை பாா்வையிட்டனா்.இந்த திமிங்கலம் சுமாா் 4 டன் எடையும், 12அடி நீளமும் இருந்தது.

கால்நடை மருத்துவா் வரவழைக்கப்பட்டு, நிகழ்விடத்திலேயே திமிங்கலத்தின் உடல்கூறாய்வு செய்யப்பட்டது. பின்னா், வனத்துறையினா் அருகில் உள்ள சவுக்குக் காட்டில் குழிதோண்டி பாதுகாப்பான முறையில் புதைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

10இல் 9 முறை டாஸ் தோல்வி: ருதுராஜ் கலகலப்பான பதில்!

‘ஒரு காபி சாப்பிடலாம், வா!’

மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்கு இடம் பெயர்ந்தார் குருபகவான்!

"அவமானத்துக்குரிய மௌனத்தையே மோடி கடைபிடிக்கிறார்": ராகுல் | செய்திகள்: சிலவரிகளில் | 01.05.2024

மறுபடியும் டாஸ் தோல்வி: சிஎஸ்கே பேட்டிங்; அணியில் 2 மாற்றங்கள்!

SCROLL FOR NEXT