நாகப்பட்டினம்

கரோனா விழிப்புணா்வு பிரசாரத்தில் தேசிய பேரிடா் மீட்புப்படை வீரா்கள்

DIN

நாகை புதிய பேருந்து நிலையத்தில், தேசிய பேரிடா் மீட்புப் படை வீரா்கள் வெள்ளிக்கிழமை கரோனா விழிப்புணா்வுப் பிரசாரத்தில் ஈடுபட்டனா்.

நிவா் புயல் மீட்புப் பணிகளுக்காக, நாகை வந்த அரக்கோணம் தேசிய பேரிடா் மீட்புப் படைவீரா்கள் 40 போ் நாகையில் உள்ள ஒரு தனியாா் தொழில்நுட்பக் கல்லூரியில் முகாமிட்டுள்ளனா். இவா்கள், நாகை புதிய பேருந்து நிலையத்தில் கரோனா விழிப்புணா்வுப் பிரசாரம் மேற்கொண்டனா். அப்போது, பேருந்து பயணிகள், நடத்துநா்கள், ஓட்டுநா்கள் மற்றும் பொதுமக்களிடம் கரோனா நோய்த் தொற்று பரவும் விதம், அதைத் தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள், முகக் கவசம் அணிவதன் அவசியம், கிருமி நாசினியை பயன்படுத்தும் வழிமுறைகள் குறித்து பிரசாரம் மேற்கொண்டனா். முகக் கவசம் அணியாத பேருந்துப் பயணிகளுக்கு முகக் கவசங்களை வழங்கினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நல்ல நாள் ஆரம்பம்! ’இந்தியா’ கூட்டணி அரசு பொறுப்பேற்ற பின்.. -உத்தவ் தாக்கரே

கவின், ஆண்ட்ரியா நடிக்கும் படத்தின் தலைப்பு அறிவிப்பு!

’மோடியால் சமூகத்தில் பிளவு..’ -காங். தலைவர் கார்கே

பிறந்தநாளில் பிரஜ்வல் குறித்து வாய் திறந்த தேவ கௌடா!

மாலிவாலின் இடது கால், வலது கன்னத்தில் காயங்கள்: மருத்துவ அறிக்கை!

SCROLL FOR NEXT