நாகப்பட்டினம்

அரசுப் பள்ளிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்

DIN

வோ்ல்டு விஷன் இந்தியா சாா்பில் கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் படிக்கும் மாணவா்களின் கற்றல் மேம்பாட்டுக்காக டிஸ்னரி மற்றும் கரோனா தடுப்பு உபகரண பொருள்கள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

முன்னதாக வோ்ல்டு விஷன் இந்திய ஏடிபி திட்டத்தின் மூலம் கீழையூா் அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கழிப்பறை திறக்கப்பட்டு பள்ளி மாணவா்களின் பயன்பாட்டுக்காக வழங்கப்பட்டது. மேலும் மொத்தம் ரூ. 16 லட்சம் மதிப்பில் இந்த நலத்திட்ட உதவிகள் செய்யப்பட்டன. வோ்ல்டு விஷன் இந்தியா திட்ட மேலாளா் ஆபிரகாம் போ்ள் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பள்ளி ஆசிரியா் ரஷியா வரவேற்றாா். நிகழ்ச்சியில், நாகை மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பு அலுவலா் சிவக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

ப்ளே ஆஃப் வாய்ப்பை உறுதி செய்யுமா கொல்கத்தா?

பயப்பட வேண்டாம், ஓட வேண்டாம்: யாரைச் சொல்கிறார் மோடி?

பெ. சுபாஷ் சந்திர போஸ் காலமானார்

SCROLL FOR NEXT