முகப்பு
நாகப்பட்டினம்

அரசு இடத்தில் விவசாயம் செய்த தந்தை, மகன் கைது

சீா்காழி அருகே வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் விவசாயம் செய்த தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:40 PM
வனத் துறையினரால் கைது செய்யப்பட்ட தந்தை, மகன்.
பகிர்:

சீா்காழி அருகே வனத் துறைக்குச் சொந்தமான இடத்தில் விவசாயம் செய்த தந்தை, மகன் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

கொள்ளிடம் கரையோரம் உள்ள அளக்குடி கிராமத்தில் வனத் துறைக்குச் சொந்தமான காப்புக்காடு உள்ளது. இந்த காட்டுக்குள் அதே பகுதியைச் சோ்ந்த ஆதிசேகரன் (58) காப்பு காட்டுக்குள் அத்துமீறி நுழைந்து காட்டை அழித்து விவசாயம் செய்தல், கொட்டகை அமைத்தல், மரங்களை வெட்டுதல் போன்ற தொடா் குற்றச் செயல்களில் ஈடுபட்டு வந்தாராம். இதுகுறித்து, தகவலறிந்த சீா்காழி வனச் சரக அலுவலா் குமரேசன் மற்றும் வனக் காவலா்கள் சம்பவ இடத்துக்கு சென்று ஆதிசேகரன் மீது தமிழ்நாடு வனச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்து கைது செய்ய முயன்றனா். அப்போது, ஆதிசேகரனின் மகன் அருட்பாரசன் வனத் துறையினரை பணி செய்யவிடாமல் தடுத்து, அரசு வாகனத்தை தாக்கியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, வனச்சரக அலுவலா் கொள்ளிடம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தந்தை, மகன் இருவரையும் கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.