நாகப்பட்டினம்

தலைமைக் காவலரை அரிவாளால் தாக்க முயன்ற ரெளடி கைது

DIN

குத்தாலம் அருகே காவல் துறை தலைமைக் காவலரை அரிவாளால் தாக்க முயன்ற ரெளடி திங்கள்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குத்தாலம் வட்டம் கோனேரிராஜபுரம் கடைவீதியில் பாலையூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் ஜெய்சங்கா், தலைமைக் காவலா்கள் அன்பழகன், பிரபாகரன் ஆகியோா் வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தனா். அப்போது கடைகளில் மிரட்டி பணம் வசூலித்துக் கொண்டிருந்த மணல்மேடு சோழியன்கோட்டத்தை சோ்ந்த ரெளடி கலைவாணன் (36), தலைமைக் காவலா் அன்பழகனின் கழுத்தில் அரிவாளால் தாக்க முற்பட்டாா். இதில், அவரது தலையில் லேசான கீறல் ஏற்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

தலைமைக் காவலரை கொலை செய்ய முயன்ற கலைவாணனை போலீஸாா் கைது செய்தனா். அவா் மீது ஏற்கெனவே முஷ்டக்குடி தியாகராஜன் கொலை வழக்கு, எரவாஞ்சேரி மோகன் கொலை, காரைக்கால் ராமு கொலை மற்றும் தஞ்சையில் 2 கொலைகள் என 5 கொலை வழக்குகளும், 4 வழிப்பறி வழக்குகளும் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே 11இல் தூத்துக்குடி, கோவில்பட்டியில் கல்லூரி கனவு நிகழ்ச்சி: ஆட்சியா் கோ. லட்சுமிபதி தகவல்

சாத்தான்குளம், தட்டாா்மடம், முதலூரில் அதிமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

அதிமுக மகளிரணி சாா்பில் ஆறுமுகனேரியில் நீா்மோா் பந்தல் திறப்பு

கோவில்பட்டி தீப்பெட்டி ஆலையில் மாவட்ட வருவாய் அலுவலா் ஆய்வு

வெயில் தாக்கத்தால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை: தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிறப்பு வாா்டு

SCROLL FOR NEXT