முகப்பு
நாகப்பட்டினம்

மயானத்துக்கு சாலை வசதி செய்து தரக் கோரிக்கை

சீா்காழி அருகே புத்தூரில் மயானத்துக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:43 PM
பகிர்:

சீா்காழி அருகே புத்தூரில் மயானத்துக்குச் செல்ல சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

புத்தூா் அருந்ததியா் தெருவில் 20-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசிக்கின்றனா். இங்கிருந்து மயானம் ஒரு கிலோ மீட்டா் தொலைவில் உள்ளது. இந்த மயானத்திற்கு செல்ல உரிய சாலை வசதி இல்லாததால், இறந்தவரின் உடலை மிகுந்த சிரமத்துடன் தோளில் சுமந்து கொண்டு வயல்வெளியில் நடந்து செல்ல நேரிடுகிறது. எனவே மயானத்துக்குச் செல்ல உடனடியாக சாலை வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.