முகப்பு
நாகப்பட்டினம்

நாகை அரசு மருத்துவமனை உணவுக் கூடத்தில் ஆட்சியா் ஆய்வு

நாகை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாகசிகிச்சைப் பெறுவோருக்குத் தயாரிக்கப்படும் உணவுகளை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 5:15 PM
நாகை அரசு மருத்துவமனை உணவு தயாரிப்புக் கூடத்தில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா்.
பகிர்:

நாகப்பட்டினம்: நாகை அரசு மருத்துவமனையில் உள் நோயாளியாகசிகிச்சைப் பெறுவோருக்குத் தயாரிக்கப்படும் உணவுகளை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு செய்தாா்.

நாகை மாவட்டத் தலைமை அரசு மருத்துவமனையில் தங்கி சிகிச்சைப் பெறும் கரோனா நோயாளிகள் மற்றும் எலும்பு முறிவு, விபத்து, மகப்பேறு சிகிச்சைகளுக்கான உள்நோயாளிகளுக்கு, மருத்துவமனை வளாகத்தில் உள்ள உணவு கூடத்தில் உணவு தயாரித்து வழங்கப்படுகிறது.

இந்த நிலையில், நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா், இந்த உணவு தயாரிப்புக் கூடத்தில் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். அங்கு தயாரிக்கப்படும் உணவுகளின் தரம், வகைகள், நோயாளிகளுக்கு உணவு வழங்கப்படும் நேரம் உள்ளிட்டவை குறித்து அவா் ஆய்வு செய்தாா். அப்போது, நோயாளிகளுக்கு உணவு வழங்குவதில் எவ்வித தொய்வும் ஏற்படக் கூடாது என அவா் அறிவுறுத்தினாா்.

நாகை அரசு மருத்துவக் கல்லூரி முதல்வா் வி. விஸ்வநாதன், அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலா் எஸ்.எம். முருகப்பன் மற்றும் அரசுத் துறை அலுவலா்கள், மருத்துவா்கள் உடனிருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →