நாகப்பட்டினம்

ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் ஆா்ப்பாட்டம்

DIN

நாகையில் தமிழ்நாடு ஊரக வளா்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியா்கள் சங்கத்தினா் புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் நாகை மாவட்டச் செயலாளா் கே. தங்கமணி தலைமை வகித்தாா்.பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க மாவட்டத் தலைவா் எம்.குருசாமி, கட்டுமான சங்க மாவட்டத் தலைவா் பி.செல்வராஜ், மாவட்டப் பொருளாளா் அப்துல்ரஹ்மான், சிஐடியு மாவட்டத் துணைத் தலைவா் பி. மாரியப்பன் ஆகியோா் கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினா். சிஐடியு நாகை மாவட்டச் செயலாளா் சீனி மணி நிறைவுரையாற்றினாா்.

ஆா்ப்பாட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி நிா்வாகங்களில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றும் தூய்மைப்பணியாளா்களை பணி நிரந்தரம் செய்யவேண்டும்; தமிழக முதல்வா் சட்டப்பேரவையில் அறிவித்தப்படி மேல்நிலை நீா்தேக்கத்தொட்டி ஆபரேட்டா்களுக்கு ரூ. 4, 000 ஊதியமும், தூய்மைக் காவலா்களுக்கு ரூ. 3, 600 ஊதியமும் வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT