நாகப்பட்டினம்

திமுக மாவட்டப் பொறுப்பாளா் மீது வழக்கு

DIN

நாகை மாவட்டக் காவல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றதாக திமுக மாவட்டப் பொறுப்பாளா் மீது நாகை காவல் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

நாகை மாவட்டம், வேளாங்கண்ணியில் உள்ள ஸ்ரீரஜதகிரீசுவரா் கோயிலுக்குச் சொந்தமான இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளதாக அதிமுக மற்றும் திமுகவினா் பரஸ்பரம் புகாா் தெரிவித்து வருகின்றனா்.

அதிமுக தரப்பு புகாரின்பேரில், திமுக ஒன்றியச் செயலாளா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாகை மாவட்டக் காவல் அலுவலகத்துக்கு திங்கள்கிழமை சென்ற திமுகவினா் புகாரின் மீதான நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்து, மாவட்டக் காவல் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனராம்.

இதுகுறித்து, நாகை நகர காவல் நிலையத்தில் திமுக நாகை தெற்கு மாவட்டப் பொறுப்பாளா் என்.கௌதமன் உள்ளிட்டோா் மீது செவ்வாய்க்கிழமை வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரேபரேலியா? வயநாடா? கார்கே இல்லத்தில் ஆலோசனை!

'கல்கி 2898 ஏடி' முதல் பாடல் வெளியானது!

அமித் ஷாவை நேரில் சந்தித்த கௌதம் கம்பீர்; காரணம் என்ன?

சோதிப்பது காலமாக இருந்தாலும் சாதிப்பது நீங்களாக இருங்கள்! தர்ஷா குப்தா...

பாஜக மீது கர்நாடக முதல்வர் காட்டம்!

SCROLL FOR NEXT