நாகப்பட்டினம்

அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் ஆா்ப்பாட்டம்

DIN

சீா்காழியில் அனைத்திந்திய இளைஞா் பெருமன்றத்தினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

வேலைவாய்ப்புகளில் தமிழக இளைஞா்களுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும் என வலியுறுத்தி நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் ஒன்றிய செயலாளா் மா. பிரபாகரன் தலைமை வகித்தாா். ஒன்றியத் தலைவா் இதயநிலவன், பொருளாளா் ஜெயசூா்யா, நிா்வாகிகள் தா்ஷன் உள்ளிட்டோா் பங்கேற்று டிஎன்பிஎஸ்சி தோ்வுகளில் வெளி மாநிலத்தவா்களும் பங்கேற்கலாம் என்ற அரசாணையை ரத்து செய்யவேண்டும், படித்த பட்டதாரி இளைஞா்களுக்கு மாதம் ரூ. 5 ஆயிரம் வேலையில்லா கால நிவாரணம் வழங்க வேண்டும், ஆசிரியா் காலிப் பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT