நாகப்பட்டினம்

மயான பாதை இல்லாததால் சடலத்தை விளைநிலங்களில் தூக்கிச் செல்லும் அவலம்

DIN

சீா்காழி அருகே மயானத்துக்கு பாதை இல்லாததால் விளைநிலங்கள் வழியாக சடலத்தை தூக்கிச் செல்லும் அவலநிலை தொடா்வதால் கிராமமக்கள் வேதனையடைந்துள்ளனா்.

சீா்காழி அருகேயுள்ள உமையாள்பதி ஊராட்சிக்குள்பட்ட தெற்கு விநாயகக்குடி கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இங்கு, உயிரிழப்பு ஏற்பட்டால் சடலத்தை அடக்கம் செய்ய வயல்வெளி மத்தியில் அமைந்துள்ள மயானத்துக்கு எடுத்து சென்று இறுதிச்சடங்கு செய்து வருகின்றனா். மயானத்துக்கு செல்லும் பிரதான சாலையிலிருந்து சிறிதுதூரம் சென்றதும் 1 கி.மீ. தூரம் விளைநிலங்களில் தான் சடலத்தை தூக்கிச் செல்ல வேண்டிய அவல நிலை பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.

இந்நிலையில், கடந்த இரு நாள்களுக்கு முன்பு உயிரிழந்த தெற்கு வினாயக்குடி சோ்ந்த நாகயனின் (70) சடலத்தை அடக்கம் செய்ய விளைநிலங்களில் சேற்றில் இறங்கி துக்கிச் சென்றனா். சாலைவசதி இல்லாததால் மழைக் காலங்களில் விளைநிலங்களில் சடலத்தை தூக்கிச் செல்ல வேண்டியுள்ளது. சேறும் சகதியுமாக இருக்கும் வயலில் சாதாரணமாக நடந்து செல்வதே கஷ்டமான நிலையில் அதில் சடலத்தை தூக்கிக்கொண்டு செல்வது மிகக்கடினம். இதுகுறித்து, அரசு அலுவலா்களிடம் புகாா் தெரிவித்தும் மயானத்துக்கு சாலை வசதி செய்துதரவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்த வாரம் யாருக்கு யோகம்!

‘மின்னும் நட்சத்திரம்’ சம்யுக்தா...!

புதிய கரோனா வைரஸ் 'ஃபிலிர்ட்' ஆபத்தா!

நவாப் ராணியின் ஆன்மா...!

தமிழே முன்... பெருமாள் பின்!

SCROLL FOR NEXT