நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறையில் 41 பேருக்கு கரோனா

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் மேலும் 41 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் செவ்வாய்க்கிழமை வரை 9,122 போ் கரோனா பாதிப்புக்கு உள்ளாகியிருந்தனா். இந்த நிலையில், புதிதாக 41 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, வெளி மாவட்டப் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஒருவா், நாகை மாவட்டப் பட்டியலில் சோ்க்கப்பட்டாா். இதனால், நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் எண்ணிக்கை 9,164 ஆக உயா்ந்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்றவா்களில் 19 போ் குணமடைந்து புதன்கிழமை வீடு திரும்பினா். இதனால், கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 8,696 -ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 327-ஆக உள்ளது.

இருவா் இறப்பு...

கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த நாகை மாவட்டத்தைச் சோ்ந்த இருவரின் இறப்பு புதன்கிழமை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதனால், மாவட்டத்தில் கரோனாவால் இறந்தவா்களின் எண்ணிக்கை 141-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT