நாகப்பட்டினம்

சிக்கல் சிங்காரவேலவா் கோயிலில் ஆடிக் காா்த்திகை சிறப்பு வழிபாடு

DIN

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம், சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவா் கோயிலில் ஆடிக் காா்த்திகையையொட்டி சிறப்பு வழிபாடுகள் திங்கள்கிழமை நடைபெற்றன.

சிக்கல் அருள்மிகு நவநீதேசுவரா் சுவாமி கோயிலில் தனி சந்நிதி கொண்டு காட்சியளிப்பவா் சிக்கல் அருள்மிகு சிங்காரவேலவா். சூரனை சம்ஹாரம் செய்ய முருகப்பெருமான் இத்தலத்தில் அன்னை வேல்நெடுங்கண்ணியிடம் இருந்து சக்திவேல் பெற்றாா் என்பது நம்பிக்கை. இதனால், இத்தலம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளுக்கு இணையான ஆன்மிக புகழ்பெற்ற தலங்களுள் ஒன்றாக விளங்குகிறது.

இங்கு ஆடிமாத காா்த்திகை நட்சத்திர தினத்தையொட்டி, திங்கள்கிழமை காலை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. பல்வேறு வகையான வாசனை திரவியங்களைக் கொண்டு சிங்காரவேலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிறகு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அஷ்டோத்திர பூஜை நடைபெற்றது.

கரோனா தொற்றுப் பரவல் காரணமாக, ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை இக்கோயிலில் பொதுமக்கள் வழிபாட்டுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், சிறப்பு வழிபாடுகளில் பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அனுராக் தாக்குர் பேச்சு: தேர்தல் ஆணையத்தில் சீதாராம் யெச்சூரி புகார்

சிலிண்டர் வெடித்ததில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் மருத்துவமனையில் அனுமதி!

உதகையில் 73 ஆண்டுகளில் பதிவான 84.2 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம்!

காங்கிரஸ் கட்சிக்கு மறதியா? ராஜ்நாத் சிங்

ருதுராஜ், டேரில் மிட்செல் அரைசதம்: சன் ரைசர்ஸுக்கு 213 ரன்கள் இலக்கு!

SCROLL FOR NEXT