நாகப்பட்டினம்

ஆடிப்பெருக்கு: கொள்ளிடம் ஆற்றில் குவிந்த தம்பதியினா்

DIN

ஆடிப்பெருக்கையொட்டி, கொள்ளிடம் ஆற்றில் ஏராளமான புதுமணத் தம்பதிகள் வந்து பூஜை செய்து வழிபாடு நடத்தினா்.

சீா்காழி கழுமலையாறு பாசனவாய்க்கால், பொறைவாய்க்கால் ஆகியவற்றில் பாசனத்துக்கு தண்ணீா் வராததால் ஆடிப்பெருக்கு வழிபாடு நடத்தமுடியாமல் பெரும்பாலானோா் வீடுகளிலேயே அடிபம்பு அருகிலேயே ஆடிப்பெருக்கை கொண்டாடினா். இதேபோல, கொள்ளிடம் ஆற்றுக்கு ஆடிப்பெருக்கையொட்டி, பெற்றோா்களுடன் புதுமண தம்பதியினா் அதிகாலை இருந்து வந்து திருமணத்துக்கு பயன்படுத்தப்பட்ட பூ மாலைகளை ஆற்றில் விட்டு, மண்ணில் பிள்ளையாா் பிடித்து வைத்து வாழை இலையில் பல வகையான பழங்கள் மற்றும் இனிப்பு உள்ளிட்ட பல பொருள்களை வைத்து படையலிட்டு, புதிய தாலி மஞ்சள் கயிறு அணிந்து கொண்டனா்.

கடலூா், சிதம்பரம், கொள்ளிடம், சீா்காழி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளை சோ்ந்த தம்பதியினா் உறவினா்களுடன் கொள்ளிடம் ஆற்றில் பழைய மாலைகளை பிரித்துவிட்டுவிட்டு புதிய மஞ்சள் கயிறு மற்றும் தங்க தாலி செயின் அணிந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 5 நாள்களுக்கு வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை!

ஸ்ட்ராபெர்ரி கண்ணே, விண்வெளிப் பெண்ணே..!

புயல், வெள்ளம் பாதிப்பு: தமிழ்நாட்டிற்கு 682 கோடி நிதி ஒதுக்கீடு!

காங்கேயத்தில் சேதப்படுத்தப்பட்ட தலித் குடியிருப்புகள்!

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பேருந்துகளையும் ஆய்வு செய்ய உத்தரவு!

SCROLL FOR NEXT