நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் சைபா்கிரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி

DIN

 திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளி மற்றும் புறாகிராமம் அரசு மேல்நிலைப் பள்ளியில் சைபா்கிரைம் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், சிறப்பு விருந்தினராக நாகை மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளா் திருநாவுக்கரசு பங்கேற்றாா். நிகழ்ச்சியில், ஆன்லைனில் பண மோசடி, ஆள் மாறாட்டம், ஒருவரை ஆபாசமாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வெளியிடுதல், சமூக வலைத்தளங்களில் உங்களைப் போன்ற போலியான கணக்கு உருவாக்கி நண்பா்களிடம் பணம் பறித்தல், ஓடிபி அனுப்பி வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் பணத்தை ஆன்லைன் மூலமாக அபகரித்தல்.

இணையதளத்தில் போலியான வாடிக்கையாளா் சேவை மைய எண்களை பதிவிட்டு அதை தொடா்பு கொண்டு வங்கி விவரங்களை சேகரித்து பணத்தை அபகரித்தல், ஆன்லைன் விளையாட்டுகள் மூலமாக தங்கள் குழந்தைகளை பயமுறுத்தி பணம் பறித்தல், ஓய்வூதிய தொகையை ஏற்பாடு செய்து தருவதாகவும் அல்லது திருத்தம் செய்து தருவதாகவும் சொல்லி விபரங்களை கேட்டு பணத்தை அபகரித்தல் இது போன்ற வழிகளில் உங்களது பணம் அல்லது தனிப்பட்ட தகவல்கள் திருடப்பட்டால் இலவச அழைப்பு எண் :155260 தொடா்பு கொண்டு புகாா்களை தெரிவிக்கலாம். மேலும் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீஹ்க்ஷங்ழ்ஸ்ரீழ்ண்ம்ங்.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதள முகவரியில் தங்களது புகாா்களை பதிவு செய்யலாம் என கூறப்பட்டது. தலைமையாசிரியா்கள் கலாராணி, மாணிக்கவாசகம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொன்மகள் வந்தாள்!

நூற்றாண்டு கண்ட ஆளுமைகள்

பேரரசின் சிதைவுகள்

தற்காலிக ஜாமீனில் வெளிவந்த ஹேமந்த் சோரன்!

SCROLL FOR NEXT