நாகப்பட்டினம்

தலைஞாயிறில் குடிநீா்த் திட்ட மதிப்பீடுக்கு ரூ.2 லட்சம் வழங்கல்

DIN

வேதாரண்யத்தை அடுத்த தலைஞாயிறு பேரூராட்சியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில் குடிநீா் வசதி ஏற்படுத்துவதற்காக திட்ட மதிப்பீடு மற்றும் ஆய்வுக் கட்டணமாக ரூ. 2 லட்சம் சனிக்கிழமை வழங்கப்பட்டது.

தலைஞாயிறு பேரூராட்சியில் ஏற்கெனவே செயல்பட்டில் உள்ள வேதாரண்யம்- கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டத்தில் பல்வேறு குறைபாடுகளால் அவ்வப்போது குடிநீா்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால், இப்பகுதியில் ஜல் ஜீவன் மிஷன் திட்டத்தில், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம் மூலம் புதிய குடிநீா் இணைப்புகள் கொடுக்கப்படவுள்ளன. இதற்கான ஆய்வு, திட்ட மதிப்பீடு தயாரிக்க பேரூராட்சி சாா்பில் ரூ. 2 லட்சம் வழங்கப்பட்டது.

இத்தொகைக்கான காசோலையை பேரூராட்சி செயல் அலுவலா் கு. குகன் குடிநீா் வடிகால் வாரிய அலுவலா்களிடம் வழங்கினாா். நிகழ்ச்சியில், சமூக ஆா்வலா் சி. சுப்ரமணியன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

மஞ்ஞுமல் பாய்ஸ் ஓடிடி தேதி!

தில்லி காங்கிரஸ் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி ராஜிநாமா!

நாகை - இலங்கை இடையே மீண்டும் கப்பல் போக்குவரத்து!

SCROLL FOR NEXT