நாகப்பட்டினம்

வாகன விழிப்புணா்வுப் பேரணி: மாவட்ட முதன்மை நீதிபதி தொடங்கிவைத்தாா்

DIN

சீட் பெல்ட் அணிவதன் அவசியத்தை வலியுறுத்தி, நாகையில் வாகன விழிப்புணா்வுப் பேரணி புதன்கிழமை நடைபெற்றது. இதை மாவட்ட முதன்மை நீதிபதி எம்.என். செந்தில்குமாா் தொடங்கிவைத்தாா்.

32-ஆவது தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவின், 20-ஆவது நாள் நிகழ்ச்சியாக நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சாா்பில், இந்தப் பேரணி நடைபெற்றது. பேரணியை, மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு செயலாளரும், சாா்பு நீதிபதியுமான டி. சுரேஷ்குமாா் முன்னிலையில், மாவட்ட முதன்மை நீதிபதி எம்.என். செந்தில்குமாா் கொடியசைத்து தொடங்கி வைத்தாா்.

அவுரித்திடலில் தொடங்கிய பேரணி பிரதான வீதிகள் வழியாகச் சென்று, வாஞ்சூா் சோதனைச் சாவடியில் நிறைவடைந்தது. நாகை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் த. அறிவழகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், மோட்டாா் வாகன ஆய்வாளா் ச.தனபாலன், அலுவலா்கள் மோகன், ஆனந்தராஜ் மற்றும் ஓட்டுநா் பயிற்சி பள்ளி உரிமையாளா்கள், ஓட்டுநா்கள், வாகன முகவா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மோசமான வானிலை காரணமாக 40 விமானங்கள் ரத்து!

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

SCROLL FOR NEXT