நாகப்பட்டினம்

மயிலாடுதுறை ரயில் நிலையம் 145 கொண்டாட்டம்

DIN

பழைமை வாய்ந்த மயிலாடுதுறை ரயில் நிலையம் தனது 145-ஆவது தொடக்க நாளை இன்று கொண்டாடுகிறது. இதையொட்டி மயிலாடுதுறை ரயில்வே நிலைய நடைமேடையில் கேக் வெட்டி ரயில்வே பயணிகள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் சென்னையில் இருந்து விழுப்புரம், மயிலாடுதுறை, திருச்சி, திண்டுக்கல், மதுரை, மணியாச்சி வழியாக தூத்துக்குடிக்கு அப்போதைய தென்னக ரயில்வே, இருப்புப்பாதை அமைத்தது. அவ்வகையில் மயிலாடுதுறை-தஞ்சாவூர் பாதை 1877-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி முடிவடைந்து, அப்போதைய தென்னிந்திய ரயில்வே நிர்வாகத்தால் மீட்டர்கேஜ் ரயில் பாதையில் முதன்முதலாக ரயில் வண்டிகள் இயக்கப்பட்டன. 

இந்த தடம் அன்றைய காலகட்டத்தில் சென்னையையும், தென் மாவட்டங்களையும் இணைக்கும் ஒரே முக்கிய ரயில் பாதையாக இருந்ததால் இப்பாதை இன்றளவும் மெயின் லைன் என்று பெருமையுடன் அழைக்கப்படுகிறது. 

ரயில் சேவை தொடங்கிய 145-வது ஆண்டை முன்னிட்டு, மயிலாடுதுறை ரயில் நிலைய நடைமேடையில் மயிலாடுதுறை மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கம் சார்பில் சங்கத் தலைவர் கணேசன் தலைமையில் செயலாளர் குமார் பொருளாளர் வழக்குரைஞர் சௌ.சிவச்சந்திரன் உள்ளிட்ட மயிலாடுதுறை மாவட்ட ரயில்வே பயணிகள் சங்கத்தினர் மற்றும் பயணிகள் கேக் வெட்டி, பயணிகள், வர்த்தகர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோயில் பூசாரியை தாக்கி உண்டியல் பணம் கொள்ளை

இஸ்ரேலில் அல் ஜசீரா அலுவலகங்களை மூட முடிவு: அமைச்சரவை ஒப்புதல்

வணிகா் தினம் : ஆம்பூரில் கடைகள் அடைப்பு

மின்சாரம் பாய்ந்து விவசாயி உயிரிழப்பு

ஜல்ஜீவன் திட்டப் பணிகள்: நகராட்சி நிா்வாக இயக்குநா் ஆய்வு

SCROLL FOR NEXT