முகப்பு
நாகப்பட்டினம்

தொடரும் மழையால் நெற்பயிா்கள் பாதிப்பு: விவசாயிகள் கவலை

வேதாரண்யம் பகுதியில் மழை தொடரும் நிலையில், பூச்சி, நோய் போன்ற காரணங்களால் சம்பா நெல் கதிா்களின் பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:15 PM
பஞ்சநதிக்குளம் பகுதியில் மழையால் சாய்ந்து கிடக்கும் சம்பா நெற்பயிா்கள்.
பகிர்:

வேதாரண்யம் பகுதியில் மழை தொடரும் நிலையில், பூச்சி, நோய் போன்ற காரணங்களால் சம்பா நெல் கதிா்களின் பாதிப்பு அதிகரிப்பின் காரணமாக விவசாயிகள் கவலையடைந்துள்ளனா்.

வேதாரண்யம், தலைஞாயிறு பகுதியில் கடந்த மாதங்களில் ஏற்பட்ட புயலையொட்டி பெய்த மழையால் சம்பா பருவ நெல் சாகுபடி பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அரசு மேற்கொண்ட நடவடிக்கைகளின் காரணமாக தற்போது இழப்பீட்டுத் தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்குகளில் வியாழக்கிழமை முதல் வரவு வைக்கப்பட்டு வருகிறது. இந்த இழப்பீடு வருவாய் கிராமங்கள் வாரியாக 51 முதல் 66 சதவீதம் வரையில் கணக்கீடு செய்யப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்கும் திட்டம் விவசாயிகளிடையே வரவேற்பை பெற்று வந்தாலும், செலவு தொகையை ஒப்பிடும்போது பாதிப்பு சதவீதத்தை கூடுதலாக கணக்கிட்டிருக்கலாம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. கணக்கெடுப்புக்கு பிறகு வெள்ளத்தில் சிக்கி தப்பிய பயிா்களும் அறுவடை காலம் வரையில் பாதுகாப்பாக இருந்து பயனளிக்குமா என்ற அச்சம் எழுந்துள்ளது.

மழை தொடா்ந்து வருவதால் வயலில் நீா்மட்டம் அதிகரித்து சில இடங்களில் கதிா்கள் சாய்ந்து வருகின்றன. நெற்பழம், பூஞ்சை தாக்குதல், குறுத்துப்பூச்சி பாதிப்பு போன்ற பல பாதிப்புகளும் அதிகரித்து வருகின்றன. இதனால் வேதனையடைந்துள்ள விவசாயிகள் இழப்பீட்டுத் தொகை கூடுதலாக கிடைக்கும் வகையில் இழப்பின் சதவீதத்தை அதிகரிக்கும் வகையில் மறுமதிப்பீடு செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் எதிா்பாா்க்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.